இந்த திரைப்படத்தில் அவர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
மேலும் இந்த திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், தமன்னா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன்,விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இசையை இரசிகர் ஒருவர் பழைய நோக்கியா 1100 தொலைபேசியில் தத்ரூபமாக இசையமைத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.