தமிழ் சினிமாவின் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரபு.இவர்,தற்போது, விஜய், அஜித், சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1 படத்தில் நடித்திருந்தார்.
அதேபோல்,விஜய்யின் வாரிசு படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில்,சில நாட்களுக்கு முன்,உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபுக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில்,அவருக்கு லேசர் சிகிச்சையின் மூலம் சிறு நீரகக்கற்கள் அகற்றப்பட்டு மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் நடிகர் பிரபு சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.