இந்த நிலையில் நடிகர் விவேக் நடித்த காட்சிகளை 'இந்தியன்- 2' திரைப்படத்தில் இருந்து நீக்கும் முடிவை படக்குழு கைவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
மறைந்த தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் 'இந்தியன்-2' திரைப்படத்தில் முதல்முறையாக கமலுடன் இணைந்து நடித்திருந்தார்.திரையுலகில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என ஏராளமான முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய நடிகர் விவேக்கிற்கு கமல்ஹாசன் உடன் பணியாற்றும் வாய்ப்பு மட்டும் கிடைக்காமலே இருந்து வந்தது. இதுவரை கமலுடன் மட்டும் நடித்ததே இல்லை என்ற கவலையினை நடிகர் விவேக் பல மேடைகளில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 'இந்தியன்- 2' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிட்டியது.
ஆனால் எதிர்பாராத விதமாக நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
எனவே விவேக் நடித்த காட்சிகளை நீக்கி விட்டு வேறு ஒரு நகைச்சுவை நடிகரை வைத்து படப்பிடிப்பினை மேற்கொள்ள படக்குழு தீர்மானித்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது விவேக் நடித்த காட்சிகளை நீக்கப்போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.