நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பஹீரா". இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் நடிகர் பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ளார். "பஹீரா" திரைப்படத்தின் ட்ரைலர் 2021ம் ஆண்டே வெளியாகியது.இப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் வெளியாகவில்லை. சில தினங்களுக்கு முன்பு இப்படம் இம்மாதம் மாதம் 3ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் புதிய பாடலான 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற பாடல் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.அதேவேளை Youtube இல் இலட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.