உலகின் மிக விலை உயர்ந்த மரக்கறியான Hop shoots ஒரு கிலோகிராம் இந்திய மதிப்பில் 85000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இது இலங்கையின் நாணய மதிப்பின் படி சுமார் நான்கு இலட்சம் ஆகும். இந்த மரக்கறியின் விலையானது தங்கத்தை விட விலையுயர்ந்தது என்று கூறப்படுகின்றது. இந்த hop shoots ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானது என்பதுடன் இது மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்ற ஒன்றாகவும் கருதப்படுகின்றது. இவை பொதுவாக இந்தியாவில் பயிரிடப்படுவதில்லை என்பதுடன் ஆரம்பகாலத்தில் முதன் முதலில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய பண்ணையில் வளர்க்கப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன. Humulus lupulus என்ற அறிவியல் பெயர் கொண்ட இவை சுமார் 6 மீட்டர் வரை வளரக்கூடியது. அதே போல் ஒரு செடியின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவற்றை வளர்ப்பதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என்றும் அதன் பின்னரே மேலும் அறுவடை செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. காசநோய்க்கான நிவாரணம் இதில் இருப்பதுடன் கவலை, தூக்கமின்மை, மன அழுத்தம், கவனக்குறைவு, அதிக செயல்பாட்டுக் கோளாறு (ADHD) போன்ற நோய்களை குணப்படுத்த முடியும் என்றும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த தாவரத்தில் இருக்கும் அமிலங்கள் புற்றுநோய் செல்களை அழிப்பதற்கும் முடி உதிர்வினைத் தடுக்கவும் உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.