நீண்ட காலமாக உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் அண்மையில் தனது முதல் ஸ்தானத்தை இழந்தார்.
ஜெப்பெஸோஸ் , அதானி , மார்க் சக்கர்பர்க் , பில் கேட்ஸ், பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் தொடர்ந்தும் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அண்மையில் ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில், 187 பில்லியன் டொலருடன் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும் எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவருமான பெர்னார்ட் அர்னால்ட் 185 பில்லியன் டொலருடன் 2வது இடத்தில் உள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் முதல் பணக்காரராக இருந்த எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், தற்போது அதே டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்டுள்ள எழுச்சி காரணமாக மீண்டும் முதல் இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் பங்குகள் குறையும் பட்சத்தில் மீண்டும் தனது முதலிடத்தை எலான் மஸ்க் இழக்க வேண்டிய சந்தர்ப்பம் வருமென்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.