இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பொலிவூட் நடிகர் ஷாருக்கான் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவரும் நிலையில் விஜய் சேதுபதி, யோகிபாபு போன்றோரும் நடிக்கின்றனர்.அத்தோடு இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பினை நெருங்கியுள்ள இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் கௌரவ வேடத்தில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 'லியோ' திரைப்பட படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டதால் விஜய் இத்திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிடவே தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் இத்திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதேவேளை நடிகர் அல்லு அர்ஜுன் 'புஷ்பா-2' திரைப்படத்தில் நடித்து வருவதால் அவரும் 'ஜவான்' திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.