நடிகர் சிம்புவும் இசையமைப்பாளர் அனிருத்தும் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு கடந்த 2015 ஆம் ஆண்டு அனிருத்துடன் இணைந்து 'பீப் சோங்' எனும் சுயாதீனப்பாடல் ஒன்றை வெளியிட்டார்.அந்த பாடல் வெளியானதும் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பெண்களை இழிவு படுத்துவது போல் அமைந்த அந்த பாடலுக்கு மாதர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு சிம்பு மற்றும் அனிருத்தை கைது செய்யுமாறும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த சர்ச்சையை அடுத்து சிம்புவும் அனிருத்தும் இணைந்து பணியாற்றவில்லை. இந்த நிலையில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை 8 ஆண்டுகளுக்கு பின்பு சிம்புவும் அனிருத்தும் இணைந்து பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.