'அசுரன்' திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறுகதையை மையமாக வைத்து விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.
சூரி கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இளையராஜா இசையமைக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்திருந்தது.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' பாடல் வெளியாகி இரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி இருந்தது.இந்த நிலையில் விடுதலை திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் மார்ச் 8 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.