தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு - பன்னீர் - 200 கிராம், இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1/2தேக்கரண்டி, மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி, தயிர் - 1 மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
மாவிற்கு - கோதுமை மா - 3 மேசைக்கரண்டி, சோள மா - 2 மேசைக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, சமையல் சோடா - 1 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை - முதலில் ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதனுடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை எடுத்து நன்கு கலந்து, பின் சிறிது நீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். மாவானது மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ இருக்கக்கூடாது. இட்லி மா பதத்திற்கு அதனை கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் கலந்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அனைத்து பன்னீர் துண்டுகளையும் ஒரே நேரத்தில் மாவில் போட்டு விடாமல் தனித்தனியாக பொரித்து எடுத்தால் சுவையான ஆரோக்கியனமான மொறுமொறுப்பான பன்னீர் 65 தயார்.