2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் "சார்பட்டா பரம்பரை".இப்படத்தில் நாயகனாக ஆர்யா நடித்திருந்த அதேவேளை பசுபதி, ஜோன் விஜய், ஜோன் கொக்கேன், ஷபீர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஒரு உண்மையான சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு உருவாகி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் பரவி வந்தன. தற்போது சார்பட்டா பரம்பரை படத்தின் பாகம் இரண்டு குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, "சார்பட்டா பரம்பரை" படத்தின் இரண்டாம் பாகத்தினை பா.இரஞ்சித் இயக்கும் அதேவேளை இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகர் ஆர்யா தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பா. ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தினை இயக்கி வருகின்றார்.இந்நிலையில் நடிகர் விக்ரம் பா.ரஞ்சித்தின் சில புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.