கடந்த மாதம் துருக்கியில் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்த நில அதிர்வில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல நாடுகளை சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த மீட்புப் பணிகளுக்காக அதிகளவான மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. இதன்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட மோப்ப நாய்களை துருக்கி விமான நிறுவனம் ஒன்று கெளரவப்படுத்தும் வகையில் விமானத்தின் முதலாம் வகுப்பு ஆசனங்களை ஒதுக்கி அந்த மோப்ப நாய்களை பயணிக்க வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமானோரைக் கவர்ந்துள்ளதுடன் அவை தற்போது வைரலாகியும் வருகின்றன.