இந்த திரைப்படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’.
மு.மாறன் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கின்றார்.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியிருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலான 'குருகுரு' பாடலின் லிரிக் வீடியோ நேற்றைய தினம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி அந்த பாடல் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.