சினிமாத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்ஷிகா.பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படம் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி ஹன்ஷிகா ஒரு தொழிலதிபரை மணந்து கொண்டார். சிறிது காலம் சினிமாவிற்கு ஓய்வு கொடுத்த இவர் "மஹா" எனும் திரைப்படம் மூலமாக மீண்டும் சினிமாவிற்குள் வந்தார்.
இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது இயக்குநர் இகோர் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்திற்கு "ஹன்சிகா 51 " என தற்காலிக பெயரிடப்பட்டுள்ளது.அந்தவகையில் இத்திரைப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி இன்றைய தினம் மாலை 5 மணிக்கு "ஹன்சிகா 51 " திரைப்படத்தின் தலைப்பு மற்றும் First Motion Poster என்பன வெளியாகும் என நடிகை ஹன்சிகா தன்னுடைய twitter பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.