நானும் ரவுடிதான் திரைப்படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அதன் பிறகு இருவரும் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இதில் சட்ட ரீதியாக விதிகள் மீறப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருவரும் செயல்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் அறிக்கை வெளியாகியிருந்தது.
தங்களது இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இருவரும் வெளியிட்டு வந்தனர். ஆனால், குழந்தைகளின் முகத்தை மறைத்து தான் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களது இரட்டை குழந்தைகளுடன் மும்பை விமான நிலையத்திற்குள் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .