78 வயதான வயோதிபர் ஒருவர் நிதி மேலாண்மை பிரிவில் தான் பட்டம் பெற்றதை 98 வயது நிரம்பிய தனது தாயிடம் காண்பிக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
வாழ்வில் சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதனை பலர் நிரூபித்து சாதித்து காட்டியுள்ளனர். அந்த வரிசையில் இந்த வயோதிபரும் இணைந்துள்ளார். அதிலும் பட்டமளிப்பு விழா என்பது இளவயதில் மாணவர்களுக்குக் கிடைக்கும் வாழ்நாளின் அற்புதமான நிகழ்வாக அமைந்து விடுகின்றது.
குறித்த இந்த முதியவரின் இந்த செயலானது தற்போது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு அவரின் தாயாரினால் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அதே உடையுடன் வீட்டிற்குச் சென்று தனது தாயாரை சந்தித்து ஆரத்தழுவி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் இந்த 78 வயது முதியவர்.
நான் பட்டம் பெற்றுவிட்டேன் அம்மா என்று தனது தாயைக் கட்டியணைத்து மகிழ்ச்சியாகக் கூறுகிறார்.இதனைக் கேட்டு அவரின் தாய் ஆனந்தமாய் மகனை கட்டியணைக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன் இதனை பார்ப்பவர்கள் கண்களில் ஆனந்தக்கண்ணீரையும் வரவழைத்துள்ளன.