பார்த்தேன் ரசித்தேன், தில், தீனா, அள்ளித்தந்த வானம், பிதாமகன், நந்தா ஆகிய படங்களில் லைலாவின் தனித்துவமான நடிப்பு ரசிகர்களுக்கு மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.அந்தவகையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு,புதிய திரைப்படம் ஒன்றில் இணைத்துள்ளார் நடிகை லைலா.
தமிழ் திரையுலகில் 'ஈரம்' என்ற முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் அறிவழகன் தற்போது 'சப்தம்' திரைப்படத்தை இயக்கிவருகின்றார்.இப்படத்தின் படிப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தொடங்கியது.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
திரில்லர் திரைப்படமாக உருவாகும் 'சப்தம்' திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் படமாக்கப்படவுள்ளது.இப்படத்தில் நடிகர் ஆதி,சிந்து மேனன்,நந்தா துரைராஜ்,சரன்யா மோகன்,லட்சுமி மேனன் இணைந்து நடித்துவருகின்றன நிலையில்,இப்படத்தில் தற்போது நடிகை லைலா இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த போஸ்டரை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.