தென் கொரியாவின் யாங்பியாங் நகரில் வசித்து வரும் ஒருவர், தனது வளர்ப்பு நாயை காணவில்லை என பல நாட்க்களாக தேடி வந்துள்ளார்.
அப்படி தேடியபோது சந்தேகத்துக்கிடமான வீடு ஒன்றில் நூற்றுக்கணக்கான நாய்கள் அடைத்து வைக்கப்பட்டு, கொடுமைப் படுத்தப்படுவதை பார்த்துள்ளார்.
அவர் இதுபற்றி விலங்குகள் ஆர்வலர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடந்த சோதனையில், குறித்த வீட்டின் பின்புறத்தில் கூண்டுகள், சாக்கு பைகள் மற்றும் பெட்டிகளில் ஆயிரக்கணக்கில் அழுகிய நிலையிலான நாய்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிருடன் இருந்த சில நாய்களும் பல நோய்களால் பாதிக்கப்பட்டும், சத்து பற்றாக்குறையால் மெலிந்த நிலையிலும் காணப்பட்டன.
அந்த வீட்டில் இருந்த 60 வயது நபர், கைவிடப்பட்ட நாய்களை, பட்டினிப்போட்டு உயிரிழக்க செய்துள்ளார்.அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
விலங்குகள் உரிமை குழு ஆர்வலர்கள் கூறும்போது, வர்த்தக ரீதியாக பலன் தராதவை என தெரிந்ததும், நாய்களின் உரிமையாளர்கள், பராமரிப்புக்கான பணத்தை கொடுத்து நாய்களை பாதுகாக்கும்படி கூறியுள்ளனர்.
ஆனால் அவர் பணத்தை பெற்றுக்கொண்டு, நாய்களை துன்புறுத்தி கொலை செய்துள்ளார். அவரின் இந்த செயல்பாட்டுக்கு பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டுவருகின்றனர்.