டிமென்சியா(Dementia) எனப்படும் ஞாபக மறதி நோய் உலகம் முழுவதிலும் 5 கோடி பேருக்கு அதிகமானோர் டிமென்சியா என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் இந்த நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நோயின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட நபரின் மூளையின் செயற்பாடு படிப்படியாக குறைவடைந்து , அவரது நினைவாற்றல், சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன், உடலின் செயற்பாடு உள்ளிட்டவை பாதிக்கப்படுகின்றன.
இந்தியாவில் குறித்த நோயின் தாக்கம் தொடர்பில் இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழகம், அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர். இதனடிப்படையில் இந்தியாவில் 8.8 சதவீத முதியோருக்கு டிமென்சியா நோய் பாதிப்பு உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இதேவேளை உலகில் அதிகளவானோருக்கு இந்த நோய் பற்றிய போதிய அறிவோ விழிப்புணர்வோ இல்லாத நிலையில், எதிர்வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் 19.1 சதவீதம் பேருக்கு இந்த நோய்ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.