நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி “சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்” என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.
இதுவரை “சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்” சார்பில் 'கனா', 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா','அருவி', 'டாக்டர்', 'டான்' போன்ற திரைப்படங்களை தயாரித்திருந்தார். இதேவேளை சிவகார்த்திகேயன் அடுத்ததாக புது திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறார். அதன்படி சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள புதிய திரைப்படத்திற்கு 'கொட்டுக்காளி' என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ளதோடு இப்படத்தை 'கூழாங்கல்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.