Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
14
நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்திக்கொள்வதற்கான எளிய வழி!

SooriyanFM Gossip - நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்திக்கொள்வதற்கான எளிய வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

316 Views
நாங்கள் தினசரி சமையலுக்காகப் பயன்படுத்தும் வெந்தயத்தில் பலவித நன்மைகள் உள்ளடங்கியுள்ளன. அதேபோன்று முளைகட்டிய வெந்தயத்திலும் பலவித ஆரோக்கிய நலன்கள் உள்ளடங்கியுள்ளன. அந்தவகையில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்தவகையில் உதவக்கூடியதாக முளைகட்டிய வெந்தயம் உள்ளது. 

குறிப்பாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் வெறும் வயிற்றில் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், வெந்தயத்தில் உள்ள மூலக்கூறுகளால் உடலில் உள்ள இன்சுலின் சுரப்பு அதிகரித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

முளைகட்டிய வெந்தயம் உடலில் கெட்ட கொழுப்புக்களை சேரவிடாமல், இரத்தத்தின் செயற்பாட்டை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. இதனால் இதயத்துடன் தொடர்புடைய நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

வெந்தயம் இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மையைக் கொண்டது. முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் உடற்சூட்டினைப் போக்கிக்கொள்ள முடியும். அத்துடன் வயிற்று வலி, பருக்கள், முடி உதிர்வு போன்ற பிரச்சினைகளிலிருந்தும் விடுபட முடியும்.

அதிக உடல் எடையினால் அவதியுறுவோர், தினமும் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் விரைவில் உடல் எடையைக் குறைத்துக்கொள்ள முடியும்.

முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் எமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top