'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநராக திகழ்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இவர் இயக்கிய 'கைதி' ,'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற திரைப்படங்கள் இரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சாதனை புரிந்தது.
இதேவேளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 37 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்தநிலையில் லோகேஷ் கனகராஜ் இளையதளபதி விஜய்யை வைத்து இயக்கும் 'லியோ' திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சஞ்சய் தத் தனது வாழ்த்தினை அவரது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் தம்பி, மகன், குடும்ப உறுப்பினர் லோகேஷ் கனகராஜ். கடவுள் உங்களுக்கு மேலும் பல வெற்றிகளையும், அமைதியையும், நலத்தையும் அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். லவ் யூ!" என பதிவிட்டுள்ளார்.