இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற திரைப்படங்கள் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் "1947- ஆகஸ்ட் 16". இந்த திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார்.அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து இந்த திரைப்படத்தின் முதல் பாடலான "கோட்டிக்கார பயலே" பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் வைரலானது.இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடலான "சீனிக்காரி" பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன் ராஜா வரிகளில் சத்ய பிரகாஷ் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.