உலகளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஒரு சமூக ஊடகமென்றால் அது பேஸ்புக்தான்.
பொருளாதார நெருக்கடிக் கரணமாக இந்நிறுவனம் மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுக்கவுள்ளது.
சமீபத்தில் மெட்டா நிறுவனத்தில் இருந்து ஒரே நேரத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு ஆரம்பம் முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன.
இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர். சந்தை நிலையை கருத்தில் கொண்டு மேலும் சில நிறுவனங்கள் இரண்டாவது கட்டமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருகின்றன.
சமீபத்தில் மெட்டா நிறுவனத்தில் இருந்து சுமார் 12 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இப்போது இரண்டாம் கட்டமாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை மெட்டா நிறுவனம் எடுத்துள்ளது.
இந்த முடிவுக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.