‘கோமாளி’, ‘லவ் டுடே’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட இயக்குநராகவும் நடிகராகவும் இருப்பவர் பிரதீப் ரங்கநாதன்.
அதேபோல் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படத்தை இயக்கி தனக்கான இரசிகர்களை உருவாக்கியவர் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
நடிகர் அஜித்தின் ’ஏகே 62’ திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து இவர் பிரதீப் ரங்கநாதனுடன் இணைய இருப்பதாகவும் இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க காதல் களத்தை மையமாக கொண்டு உருவாகின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தத் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.