இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் உருவாக்கி வரும் 'சந்திரமுகி- 2' திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அத்தோடு கங்கனா ரணாவத், லக்ஷ்மி மேனன், மகிமா நம்பியார், சுபிக்ஷா ஆகியோரும் நடித்து வரும் நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலுவுக்கும் இயக்குநர் பி. வாசுவுக்கும் இடையில் சிறு மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான நாள் முதல் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு சரியாக கலந்து கொள்வதில்லை என்று புகாரளிக்கப்பட்டு வந்தது. இதேவேளை படப்பிடிப்பு தளத்துக்கு வந்தவுடன் நடிகர் வடிவேலு தனது காட்சிகளை உடனடியாக எடுக்கும் படி தொடர்ந்து இயக்குநரை நச்சரித்து வந்துள்ளார்.
இதனால் கோபப்பட்ட இயக்குநர் பி. வாசு "நீ நடிக்கவே வேணாம் கிளம்புனு" கோபத்துடன் கையை காட்டி சொல்லி விரட்டி விட்டாராம்.இதனால் பி. வாசு தன்னை அவமானப்படுத்தி விட்டதாக வடிவேலு செல்லும் இடமெல்லாம் சொல்லி வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.