நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் அதிதி ஷங்கர்,சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீனா சீனா' பாடல் சமீபத்தில் வெளியானது.கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் ஆகியோரின் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ஒரே நாளில் 3மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.
இந்நிலையில்,இப்படத்தின் புதிய அறிவிப்பாக 'மாவீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.