தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் வாத்தி.இத்திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்திருந்த அதேவேளை சமுத்திரக்கனி,சாய்குமார்,ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.வாத்தி திரைப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பினை பெற்றது.மேலும் 'வாத்தி' திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாயை வசூல் செய்திருந்ததை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.இந்த வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர்.
இந்த நிலையில் தற்போது வாத்தி திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.அதன்படி, "வாத்தி" திரைப்படம் நாளைய தினம் Netflix ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை படக்குழு காணொளி ஒன்றினை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.