இப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்திருந்தார்.அவரை விஜய்,லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் வரவேற்ற வீடியோவை தயாரிப்பு நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்தது.
இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.மேலும் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இணைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் புதிய அறிவிப்பாக மற்றுமொரு வில்லனாக நடிகர் மதுசூதனன் ராவ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு இம்மாதம் 24ம் திகதி நிறைவுபெறவுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.