நடிகர் கவின் நடிக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு 'நட்புன்னா என்னனு தெரியுமா?' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கவின். சின்னத்திரையில் பிரபலமாக இருந்த நடிகர் கவினுக்கு இந்த திரைப்படம் பெரிய அளவில் அடையாளத்தை கொடுக்கவில்லை.பின்பு இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவந்தார்.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'லிப்ட்' திரைப்படம் ஓடிடியில் வெளியானாலும் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இதேவேளை கடந்த மாதம் வெளியான டாடா திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திலும் வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இந்த நிலையில் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ஊர்க்குருவி' எனும் திரைப்படத்தில் நடித்து வரும் வேளையில் இன்னுமொரு புதிய திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதேவேளை இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.