தமிழ் சினிமாவில் 1978 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கியவர் பாரதிராஜா.
இவர் இயக்குநராக மட்டுமல்லாமல் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான திருசிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் பாரதிராஜா மீண்டும் திரைப்படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
அதாவது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை இயக்கி, அதில் அவர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த திரைப்படத்திற்கு 'தாய்மெய்' என தற்காலிகமாக தலைப்பு வைத்துள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.