Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
16
கிம் ஜாங் உன் பற்றி இணையத்தில் தேடியவருக்கு மரண தண்டனை

SooriyanFM Gossip - கிம் ஜாங் உன் பற்றி இணையத்தில் தேடியவருக்கு மரண தண்டனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

219 Views
39 வயதாகும்  கிம் ஜாங் உன் ஒரு சர்வாதிகாரியாக செயல்பட்டுவருவதாக உலகளவில் பலரும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.
25.97 மில்லியன் சனத்தொகையை கொண்ட வடகொரியாவில் வெளியுலகம் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் உள்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை வெளிநாடுகளும் அறிந்துகொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் வடகொரியாவில் அதிபரை பற்றி இணையதளத்தில் தேடியதற்காக, உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல கிம் ஜாங் உன்னை எதிர்ப்பவர்கள் மற்றும் அரசுக்கு எதிராக சதி செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. அங்கு சினிமா படங்கள், நாடகங்கள் உள்ளிட்ட எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சங்களும் கிடையாது.

வடகொரியாவில் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளுக்கு மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதி உள்ளது. அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

அதாவது அவர்கள் இணையத்தில் என்ன தேடுகிறார்கள் என்பதை கண்காணிக்க தனியே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அவ்வப்போது அரசுக்கு அறிக்கை அனுப்பும்.

அந்த வகையில் அண்மையில் அதிபருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் அவரை பற்றிய தகவல்களை `பியூரோ 10' என அழைக்கப்படும் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இணையத்தில் தேடியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் கடும் கோபம் அடைந்த அதிபர் கிம் ஜாங் உன், அவருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார். நாட்டின் உயர் பதவியில் உள்ள உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கே மரண தண்டனை வழங்கி இருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிம் ஜாங் உன் அடிக்கடி இப்படி அதிகமான மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகிறார். உலக நாடுகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்கும் அந்நாட்டு மக்கள், பாதிக்கப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top