கருமை, முகப்பருக்கள், கரும்புள்ளிகள், முகச் சுருக்கங்கள் போன்ற அனைத்து வகையான சருமப் பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை கஸ்தூரி மஞ்சளிற்கு அதிகம் உண்டு. எனவே கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தி எமது சரும அழகை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
கஸ்தூரி மஞ்சளுடன், சிறிதளவு பயறு மாவையும் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இது எமது சருமத்திலுள்ள கருமையை நீக்க உதவும்.
சிறிதளவு கஸ்தூரி மஞ்சளுடன், பசுப்பாலையும் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் வரை நன்கு காய வைத்த பின்னர், முகத்தை சுத்தமாகக் கழுவ வேண்டும். இது முகப்பருக்களை நீக்கி, சருமத்தைப் பாதுகாக்கின்றது.
வாரத்தில் இருமுறை கஸ்தூரி மஞ்சளுடன், சிறிதளவு குங்குமப் பூவையும் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர், குளிர்மையான நீரால் முகத்தைக் கழுவி வர, சருமம் பொலிவாகக் காணப்படும்.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது சருமத்தைப் பாதுகாப்போம்.