நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றிருந்தார்.
இதைத்தொடர்ந்து, கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த நடிகர் அஜித் தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அஜித்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் அஜித்துடன் இரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.