இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கியூல் நோக்கி சென்ற குறித்த ரயிலில் பயணித்த ஒரு தம்பதியினருக்கே இந்த சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில் இருந்த டிக்கெட் பரிசோதகர் அந்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததனை அடுத்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதனையடுத்து, சகபயணிகள் டிக்கெட் பரிசோதகரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளதுடன் ரயிலில் பெண் பயணியிடம் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த இலையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட டிக்கெட் பரிசோதகருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை வேண்டும் என்று பலரும் விமர்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.