தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவருடைய நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் பத்துதல.இயக்குநர் ஒபலி கிருஷ்ணா இயக்கத்தில் இம்மாதம் 30 ஆம் திகதி இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது.
நடிகர் சிம்புவோடு கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அதேவேளை இப்படத்திற்கு இசைப்புயல் A .R ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள்,ட்ரைலர் அனைத்தும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
மேலும் பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. , "பத்து தல" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் சிம்பு தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் சிம்புவின் New Look புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இவர் விமான நிலையம் செல்லும் காணொளியும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.