சிவப்பரிசியில் புரதம், நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த உணவாகும். ஆரோக்கியம் நிறைந்த இந்த ரொட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் - சிவப்பரிசி - 1 கப், வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1, சீரகம் - ஒரு தேக்கரண்டி, கரட் - 1,,தேங்காய்த்துருவல் - 5 தேக்கரண்டி, கறிவேப்பிலை இலை - சிறிதளவு, கொத்தமல்லி இலை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை - முதலில் வெங்காயம், கொத்தமல்லி இலை ,பச்சை மிளகாய் போன்றவற்றை சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் கரட்டை துருவிக்கொள்ள வேண்டும்.
சிவப்பரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் போட்டு அரைத்து சிவப்பரிசி மா தயார் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன்,வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை இலை , கொத்தமல்லி இலை அனைத்தையும் ஒன்றாகப் கலந்து அதில் சூடான நீர் சிறிது சிறிதாக விட்டு, சப்பாத்தி மா போல் பிசைந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பிசைந்த மாவை அரை மணி நேரம் ஈர துணியால் மூடி வைத்து பின்னர் சிறு சிறு உருண்டையாக்கி வட்டமாகத் தட்டி கொள்ள வேண்டும். பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த ரொட்டியை போட்டு, சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறினால் சத்தான சுவையான சிவப்பரிசி ரொட்டி தயார்.