அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.
நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 35.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது, பின்னர் 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி 39.5 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றிபெற்றது. கே.எல். ராகுல் அதிகபட்சமாக 75 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார். அதேநேரம் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்கமால் 45 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததுடன் பந்துவீச்சில் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை வீழ்த்தியதுடன் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.