இனிப்புப் பண்டங்களில் மைசூர் பாகிற்கு தனித்துவமான இடமுண்டு. எனவே இன்றைய சமையல் குறிப்புப் பகுதியில் சுவையான மைசூர் பாகை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை அறிந்து கொள்வோம். இதற்குத் தேவையான பொருட்கள்,
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
நெய் - 2 1/2 கப்
தண்ணீர் - தேவைக்கேற்ப
முதலில் கடலை மாவை நன்றாக சலித்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அகலமான பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து, நன்கு சூடானதும் சலித்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து 3 நிமிடங்கள் வரை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பிறிதொரு பாத்திரத்தில் நெய்யை சேர்த்து நன்கு உருக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் சர்க்கரை சேர்த்து தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, கரைத்துக் கொள்ளவும். (சர்க்கரை பாகு ஆகாமல் இருக்க வேண்டும்)
பின்னர் வறுத்த கடலை மாவுடன், கரைத்து வைத்துள்ள சர்க்கரையையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவை நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், உருக்கி வைத்துள்ள நெய்யையும் ஊற்றி. நன்றாக கிளற வேண்டும்.
பின்னர் கடலைமாவு சரியான பதத்திற்கு வந்த பின்னர், நெய் பூசிய தட்டில் சம அளவில் பரப்பி வைத்துக் கொள்ளவும். மைசூர் பாகு நன்கு காய்ந்த பின்னர், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வெட்டி உண்டு மகிழுங்கள்.