முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் இடம்பெற்றது.அந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.முதல் போட்டியில் விளையாடாத இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா இன்றைய போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றால் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றிவிடும்.தொடரை வெல்ல இந்திய அணிக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: ரோஹித் ஷர்மா , ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.
அவுஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் , மார்னஸ் லபுச்சேன், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், மக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சீன் அப்போட், மிட்செல் ஸ்டார்க், அடம் சம்பா. ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது.
இலங்கை நேரப்படி போட்டி இன்று மதியம் 1.30க்கு இடம்பெறவுள்ளது. டெஸ்ட் தொடரை இழந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை வெல்வதற்காக கடுமையான முயற்சிகளை எடுக்குமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.