SooriyanFM Gossip - அமெரிக்காவை போரில் எதிர்கொள்ள 8 இலட்சம் பேர் தயார் - வடகொரியாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
272 Views
அமெரிக்காவை போரில் எதிர்கொள்ள மாணவர்கள்,தொழிலாளர்கள் என 8 இலட்சம் பேர் இராணுவத்தில் இணைய ஆர்வமுடன் உள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.
5 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா என இரு நாடுகளும் மிக பெரிய அளவில், கூட்டு இராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது. எனவே கடந்த 13-ம் திகதி தொடங்கிய இந்த பயிற்சியானது, வருகிற 23-ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு பதிலடி தெரிவிக்கும் வகையில் தென்கொரியாவின் அண்டை நாடான வடகொரியா,ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை செய்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈடுபட, 8 இலட்சம் மக்கள் வடகொரிய இராணுவத்தில் இணைவதற்கு ஆர்வமுடன் இருப்பதாக வடகொரியா கூறுகிறது. அவர்களில் பலர் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களாக உள்ளனர் என வடகொரியாவின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. எனவே அமெரிக்கா மற்றும் தென்கொரிய இராணுவ கூட்டு பயிற்சிக்கு பதிலடியாக கடந்த வியாழக்கிழமை வடகொரியா, வாசாங்போ-17 என்ற கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.