1982 ஆம் ஆண்டு வெளியான "ஏழாவது மனிதன்" எனும் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ரகுவரன். இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் வில்லனாக பெரும்பாலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானார்.
மேலும் சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி , மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் நடிகை ரோகிணியை 1996 ஆம் ஆண்டு மணந்து கொண்டார்.இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. அதனால் இவர் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை ரோகிணியும் 2004 ஆம் ஆண்டு பிரிந்து சென்றார்.
அதன் பிறகு ரகுவரன் 2008 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி காலமானார்.இந்த நிலையில் நடிகர் ரகுவரனின் காதல் மனைவியான ரோகிணி அவரது நினைவு தினத்தை சமூக வலைத்தளத்தின் வாயிலாக அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
நடிகை ரோகிணி தன்னுடைய Twitter பக்கத்தில் , "ரகுவரன் இருந்திருந்தால் தற்போதைய சினிமாவை நிச்சயம் விரும்பியிருப்பார். மேலும் ஒரு நடிகராகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.