Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
20
3 பவுன் தங்கச்சங்கிலியை விழுங்கிய வளர்ப்பு நாய்

SooriyanFM Gossip - 3 பவுன் தங்கச்சங்கிலியை விழுங்கிய வளர்ப்பு நாய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

698 Views
உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இந்நிலையில் விலை கூடிய தங்க சங்கிலி ஒன்றை வளர்ப்பு நாய் ஒன்று விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது.

ஆனால் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5500-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே போவதால் நகை வாங்குவதே குதிரை கொம்பாக மாறிவிடும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் , தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை வீட்டின் கண்ணாடி முன்பு கழற்றி வைத்திருந்தார்.

அப்போதுதான் வீட்டில் அவர் வளர்த்து வந்த செல்ல நாய் படுக்கை அறைக்குள் சென்று விட்டு வெளியே வந்தது. அப்போது அந்த நாய் தரையில் கிடந்த பென்சில் ஒன்றை அப்படியே விழுங்கியது.

இதை பார்த்த அவருக்கு நாய் தான் தனது நகையை விழுங்கி இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் கணவரிடம் இதுபற்றி கூற, அவர் நாயை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்.

அங்கு நாயின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்த பொது, அதில் நாயின் வயிற்றில் செயின் இருப்பது தெரியவந்தது.

பிறகு மருத்துவர்கள் அதனை பத்திரமாக மீட்டனர். 3 பவுன் நகையின் இன்றைய விலை இந்திய மதிப்பில் ரூ.1¼ இலட்சத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top