விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான 'சூது கவ்வும்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன்.
அத்திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் 'பீட்சா 2', 'வில்லா' திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.பின்பு 'தெகிடி', 'கூட்டத்தில் ஒருத்தன்', 'ஓ மை கடவுளே', 'மன்மதலீலை', 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து இரசிகர்களை ஈர்த்தார் நடிகர் அசோக் செல்வன்.
இந்தநிலையில் பிரபல தயாரிப்பாளர் மகளை நடிகர் அசோக் செல்வன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இவர் நெஞ்சமெல்லாம் காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.