இந்த ஜோடியின் ரொமான்டிக் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமான அஜித், அதன் பின்னர் ஆசை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், முகவரி, தீனா, வில்லன் என பல திரைப்படங்களில் நடித்து இரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்டார்.
இவர்கள் இருவரும் இணைந்து அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த்திருந்தனர். முன்னணி கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக வலம் வந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் அஜித்-ஷாலினி இருவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் இரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு இருவரும் இணைந்து நடித்த உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்ற பாடலின் வரிகளை இரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.