சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்தவர்கள் நல்லதண்ணி நகரில் உள்ள இனிப்புப் பண்டங்கள் விற்பனை நிலையம் ஒன்றில் வாங்கிய தொதல் பொதியில் எலி ஒன்று இறந்த நிலையில் இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலட்சக்கணக்கான மக்கள் கூடும் சிவனொளிபாத மலையில் பருவ காலங்களில் இவ்வாறு தரமற்ற உணவுகளை விற்பனை செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அங்கு தரிசனம் செய்வதற்காக வந்த பக்தர் ஒருவர் கொள்வனவு செய்த தொதல் பொதி ஒன்றிலேயே இந்த எலி இருந்ததுடன் குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.