'படையப்பா', 'சுயம்வரம்', 'சங்கமம்', 'ஜோடி', 'கண்ணுபட போகுதய்யா', 'தெனாலி', 'வில்லன்', 'சுந்தரா ட்ராவல்ஸ்', 'சமஸ்தானம்', 'மிலிட்டரி' போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை லாவண்யா தேவி.
இந்தநிலையில் 44 வயதாகும் இவருக்கு தொழிலதிபர் பிரசன்னா என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதேவேளை இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அத்தோடு இரசிகர்கள், திரையுலகினர் என்று பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் இத்தனை வருடங்களாக இவருக்கு திருமணமாகாமல் இருக்கிறதா என்று பலரும் வியப்பில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.