பாகிஸ்தானில் நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட நில அதிர்வில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
இந்த நில நடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்து இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதிகளை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தானில் பல பகுதிகளில் உணரப்பட்டது.
பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல் பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹட், லக்கி மார்வட் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, உத்தர பிரதேசத்தில் இரவு ஏற்பட்ட நில அதிர்வால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக, பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார், 160 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இலங்கையிலும் கடந்த சில வாரங்களாக சிறு அளவிலான நில அதிர்வு சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.