வறட்சியிலிருந்து எமது உதடுகளைப் பாதுகாக்க உதவும் வழிமுறைகளைப் பற்றி, இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
இரவில் தூங்குவதற்கு முன்னர், கற்றாழை ஜெல்லை உதடுகளில் பூசி மறுநாள் காலையில் மிதமான வெந்நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும். இது உதடுகளில் காணப்படும் வறட்சியை நீக்கி, உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
தேனை உதடுகளில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு காய வைத்த பின்னர், குளிர்மையான நீரால் கழுவி வர, உதடுகள் மென்மையாகக் காணப்படும்.
நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளமையினால், சரும செல்களை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவுகின்றது. எனவே வாரத்தில் இருமுறை நெய்யை உதடுகளில் பூசி 30 நிமிடங்களின் பின்னர் கழுவி வர, உதடுகளில் காணப்படும் வறட்சி விரைவாக நீங்கும்.
இதுதவிர தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உடலை புத்துணர்ச்சியுடனும், ஈரப்பதத்துடனும் வைத்துக்கொள்ள உதவும்.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது உதடுகளைப் பாதுகாப்போம்.