'காதல் வைரஸ்', 'தொட்டி ஜெயா', 'ராமச்சந்திரா', 'வெயில்', 'மச்சக்காரன்', 'மலைக்கோட்டை', 'ஆயுதம் செய்வோம்', 'குருவி', 'மாயாண்டி குடும்பத்தார்', 'தீ', 'மாத்தியோசி', 'அவன்இவன்', 'மிளகா', 'கர்ணன்', 'பல்லு படாமா பாத்துகோ' உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் ஜி எம் குமார்.
இந்தநிலையில் ஒரு படப்பிடிப்பில் ஜிஎம் குமார் மறைந்துவிட்டதாக தோற்றம் மறைவு போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஜிஎம் குமார் மே மாதம் 1ம் திகதி இறக்கப்போவதாக உள்ளது.இதேவேளை ஜி.எம். குமார் சினிமாவுக்காக எடுக்கப்பட்ட அந்த போஸ்டரின் முன் நின்று புகைப்படம் எடுத்து 'ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை' என்று பதிவிட்டு அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.